தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்று வரும் ஆசிய பசிபிக் சட்டச் சங்கத்தின் (LAWASIA) மாநாட்டை முன்னிட்டு, சிங்கப்பூர் சட்டச் சங்கத்துடன் முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூர் சட்டச் சங்கத்தின் தலைவர் டான் செங் ஹான் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ அமரசூரிய பங்கேற்றார் ,
இரு தரப்பினருக்கும் இடையிலான சட்டத்துறை சார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிளும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, இரு தரப்பினரும் இணைந்து முன்னெடுக்கக்கூடிய பொதுவான செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு முதல் இரு தரப்புகளுக்கும் இடையில் தொழில்சார் தொடர்புகள், அறிவுப் பரிமாற்றம் மற்றும் சட்டத்துறை சார்ந்த ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான எதிர்பார்ப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
LAWASIA மாநாட்டை ஒட்டி இடம்பெறும் இத்தகைய இருதரப்பு சந்திப்புகள், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சட்டத்துறையினருக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் கூட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் வாய்ப்பாக அமைகின்றன.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings