in

சவூதியில் அனோஜனுக்கு மரண தண்டனை? அலி சப்ரி கவலை

சமூக ஊடகத்தில் பதிவிட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சவூதி அரேபியாவில் தண்டனை பெற்ற இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கவலை வெளியிட்டுள்ளார்.

அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபிய அதிகாரிகளிடம் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பான தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

முறையான எழுத்துப்பூர்வமான நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்கும் வரை காத்திருப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அஷ்ரப் அவர்கள் காட்டிய பாதையில் முஸ்லிம் காங்கிரஸ் பயணம்

அனோஜன் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் ஆறுதல்