(கண்டி நிருபர் ஜே.எம்.ஹாபீஸ் )
எதிர்க்கட்சிக்குத் தேவையானவாறு செயல்பட நாங்கள் தயார் இல்லை என்று விவசாய அமைச்சர் கே.டீ. லால் காந்த தெரிவித்தார்
கண்டி, பொல்கொல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது-
அனைத்து துறைகளும், முடங்கிப்போய் இருந்த ஒரு நாட்டையே நாம் ஏற்றோம். இப்போது அனைத்து துறைகளும், சிறப்பாக இயங்குகின்றன. நாடு முன்னோக்கி செல்கிறது. எமது அரசாங்கம் மக்கள் ஆணையின்படி எமக்கு தேவையானவாறே செயல்படுகிறது, எதிர்க்கட்சிக்கு தேவையானவாறு செயல்பட நாங்கள் தயார் இல்லை.
சர்வதேச மாநாடுகளுக்கு ஜனாதிபதி செல்வதில்லை என சிலர் குறை கூறுகிறார்கள். எமது பணிகளுக்கு எமக்கு தேவையானவர்களையே நாங்கள் அனுப்புகிறோம். மாறாக எதிர்க்கட்சிக்கு தேவையானவர்களை நாங்கள் அனுப்புவதில்லை. எங்களைப் பார்த்துக் கொண்டிருக்காமல் சிதறிப் போயுள்ள எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுமாறு நாங்கள் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறோம்.
எமக்கு மக்கள் தந்த ஆணைக்கு அமைவாக நாங்கள் செயல்படுகிறோம். எதிர்க்கட்சிகள் இன்னும் பாலர் பாடசாலையிலே
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings