சென்னை:
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் கருணாபுரம்காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 35 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். இதுவரை இச்சம்பவத்தில் விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனால் வழங்கியவர்களையும் கண்டறிந்து அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சியர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings