கரூர்:
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூரில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 12ம் தேதி கம்பம் போடும் நிகழ்வுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா நடைபெற்ற நிலையில், திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் அமராவதி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் அக்கினி சட்டி, பால்குடம், தீர்த்த குடம், குழந்தை கரும்புத் தொட்டில் கட்டி கொண்டு வருதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலிலிருந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரின் உள்ளே கம்பத்தை சுமந்த பக்தர்கள், மாரியம்மன் கோவிலில் இருந்து கிளம்பி பஜார், கச்சேரி பிள்ளையார் கோவில் தெரு வழியாகச் சென்று அமராவதி ஆற்றில் சென்றடைந்து கம்பத்தை ஆற்றில் விடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கம்பம் விடும் நிகழ்ச்சியில், கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, இளங்கோ, மாணிக்கம் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், கம்பம் ஆற்றிற்கு கொண்டு செல்லும் வழி நெடுக, ஜாதி, மத பேதம் இன்றி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் நீர், மோர், குளிர்பானங்கள், அன்னதானத்தை பொது மக்களுக்கு வழங்கினர்.
திருவிழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings