கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கூட்டுறவு துறையில் ஏலம் விடும் போது மணி ஆட்டும் வேலைக்கு வந்தவர் சம்பத். இவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறும்போது முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்தார்.
கூட்டுறவு துறையில் மாவட்ட நீதிபதி என்ற பணியே இல்லாத நிலையில், இவர் தன்னை டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜ் என்று கூறிக்கொண்டு, அரசு முத்திரையுடன் கூடிய அடையாள அட்டையை தனக்கு தானே தயார் செய்து கொண்டு தனது காரிலும், இருசக்கர வாகனங்களிலும் அரசு முத்திரையுடன் கூடிய ஸ்டிக்கரையும் பயன்படுத்தி பொதுமக்களையும் பிற அரசு துறை அதிகாரிகளையும், ஊழியர்களையும் மிரட்டி வந்துள்ளார்.
இதையடுத்து தற்போது இவர் போலீஸ் வலையில் சிக்கிய நிலையில் இவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings