சென்னை:
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
டெங்கு பாதிப்பு குறித்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே இக்காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரி, தஞ்சை மாவட்டங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையை உடனே அணுக வேண்டும்.
காய்ச்சல் பாதிப்பு தொடர்பான அறிக்கையை தினசரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் இருந்து பெற வேண்டும். மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை கடைபிடித்து டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings