in

கரூரில் தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

கரூர்:

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது.

இதனால் குழந்தைகள், வயதில் மூத்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

பொதுமக்களின் இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறந்து விநியோகம் செய்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில், கரூர் தாலுகா அலுவலகம் முன்பு, தேமுதிக மாநகர மாவட்ட செயலாளர் அரவை முத்து தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

 இதில் புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சிவம், ராஜேந்திரன், மாநகர மாவட்ட பொருளாளர் அனிதா ஆனந்த், புறநகர் அவைத் தலைவர் பேராசிரியர் ரங்கநாதன், மத்திய நகர செயலாளர் ஆரிப் ராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் கலையரசன் உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியில் இளநீர்,  தர்பூசணி, மோர் உள்ளிட்ட பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நாய்கள் துரத்தியதால் குடோனுக்குள் புகுந்த புள்ளிமான் மீட்பு

ஆம்பூர் அருகே தீ விபத்தில் கருகிய 5,000 கோழிகள்