in

முதல் அரிசி ஏ.டி.எம். மையம் திறப்பு… எங்கே தெரியுமா?

புவனேஸ்வர்:

ரேஷன் கடைகளில் மலிவு விலையில் அரிசி, பருப்பு, மண்ணெண்னை உள்பட பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். அதற்காக கையில் கார்டு இருக்க வேண்டும்.

ரேஷன் கடையில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். அதுமட்டும் கிடையாது. குறிப்பிட்ட எடையோ, லிட்டரோ அதில் இருக்காது. ஏமாற்று வேலையே அதிகமாக இருக்கும்.

ஆனால் இதனை மாற்றும் வகையில் ஏடிஎம் ரேஷன் அறிமுகமாகியுள்ளது. ஏ.டி.எம். மையத்தில் பணம் தான் எடுப்போம் என்று நினைத்தால் இப்போது ரேஷன் பொருட்களையும் பெறலாம் என்பது அதிசயமே.

ஆம்… ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா இந்தியாவின் முதல் அரிசி ஏடிஎம் மையத்தை திறந்து வைத்துள்ளார்.

இதில் அரிசி ஏடிஎம்ல் ரேஷன் கார்டு தாரர்கள் ரேஷன் கார்டு எண்ணை பதிவிட்டு 25 கிலோ அரிசி வரை பெற்றுக் கொள்ளலாம். இதில் ஒரு விஷயம் என்னவென்றால் எடை மிகவும் துல்லியமாக இருக்கும்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நடிகர் நாக சைதான்யா, நடிகை ஷோபிதாவுக்கு நிச்சயதார்த்தம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 உயர்ந்தது