in

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி., கலாசாரத்துக்கு முடிவு: சந்திரபாபு நாயுடு உறுதி

திருமலை:

திருப்பதி கோவிலில் வி.ஐ.பி., கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும்’ என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

திருப்பதி மலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான உயர் அதிகாரிகளுடன் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், திருமலை திருப்பதி வனப்பகுதியில் 70 முதல் 80 சதவீதம் வனத்தை அடர்ந்த வனப்பகுதியாக மாற்ற வேண்டும். கோவிலில் வி.ஐ.பி., கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும். வி.ஐ.பி.,கள் வரும்போது எந்தவித சத்தமும் இருக்கக் கூடாது.

கோவிலில் அலங்காரம் செய்வதற்காக தேவையற்ற செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். பிரசாதம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் எந்த சமரசமும் இல்லை. இவற்றையெல்லாம் பரிசோதிக்க நவீன ஆய்வகங்களை அமைப்போம்.

பிரசாதத்தின் தரத்தை அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பாஸ்போர்ட் இணையதளம் 7ம் தேதி வரை இயங்காது

அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 18ம் நாள் மண்டல பூஜை