கோவை
கோவை கூட்ஷெட் ரோட்டில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கத்தில் மத்திய அரசின் கிராமப்புற பாரம்பரிய சித்த வைத்தியர்களின் அங்கீகாரமான, பாரம்பரிய சமூக சுகாதார வழங்குநர்களுக்கான (டிசிஎச்பி) தன்னார்வ சான்றிதழ்களின் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற வைத்தியர்களுக்கு டிசிஎச்பி வைத்தியர்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், சிறப்பாக வைத்தியம் செய்து மக்களின் நல்வாழ்விற்காக அனுதினமும் அயராது உழைப்பவர்களுக்கான சிறந்த பாரம்பரிய வைத்தியர் விருதினை, வைத்தியர் பூவா எனும் ரா.பூவரசனுக்கு வழங்கி சிறப்பித்தனர். பாரம்பரிய சித்த வைத்தியர் குடும்பத்தை சார்ந்த இவர் கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக தன் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு சித்த வைத்தியம் செய்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் கொண்டுள்ளார். மக்களின் உடல் பிணிகளை குணப்படுத்தக்கூடிய மூலிகை மருந்துகளை தயாரித்து இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் வசிக்கும் மக்களுக்கும் கொடுத்து மக்களின் நோய் தீர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings