in

மளிகை பொருட்கள் விநியோகிப்பதாக ரூ.1.70 கோடி ஏமாற்றிய பலே மோசடி மன்னன் கைது

ஆவடி

சோழவரம் அடுத்த ஞாயிறு போஸ்ட் கன்னியம் பாளையம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கிருஸ்டப்ப ரெட்டியின் மகன் கேசவன் (வயது 57). இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை மக்கள் குறை கேட்கும் முகாமில் நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், கடந்த 18.3.2022 முதல் 19.8.2022 வரை திருவள்ளூர் மாவட்டம் ஒரக்காடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் விருப்பாச்சி (45) என்பவர் என்னை சந்தித்து அரிசி பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை சப்ளை செய்து தருவதாக கூறி ரூ.1 கோடியே 29 லட்சத்து 20 ஆயிரத்து 750 பணமாகப் பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு பொருட்களை விநியோகம் செய்யவில்லை. ஆனால் என்னிடமே மேலே குறிப்பிட்டு பொருட்களை பெற்றுக் கொண்டு அதற்கான ரூ. 40 லட்சத்து 50 ஆயிரம் வரை பணத்தைக் கொடுக்கவில்லை. மொத்தமாக எனது பணம் ரூ 1 கோடியே 69 லட்சத்து 70 ஆயிரத்து 750 வரை ஏமாற்றியதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை பெற்றுக் கொண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஆவடி காவல் ஆணையாளர் சங்கரின் உத்தரவின்படி மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் நேரடி மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் அதிரடி போலீஸ் படையினருடன் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி விருப்பாச்சியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

போலீ பத்திரம் மூலம் ரூ.51 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனையை அபகரித்த 2 பேர் கைது

24 காவல் உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்