திருப்பத்தூர்
வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளை கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி உதயமானது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 2011ம் ஆண்டு கணக்கெடுப்புபடி மொத்த மக்கள் தொகை 12லட்சத்து 79 ஆயிரத்து 953ஆக உள்ளது.
திருப்பத்தூரில் 4 நகராட்சிகள், 2 வருவாய் கோட்டங்கள், 4 வட்டங்கள், 3 பேரூராட்சிகள், 6 ஊராட்சி ஒன்றியங்கள், 208 ஊராட்சிகள், 195 வருவாய் கிராமங்கள், 4 சட்டமன்ற தொகுதிகள், 2 மக்களவை தொகுதிகள் அடங்கியுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் தனி மாவட்டமாக உதயமான பிறகு இங்குள்ள அரசு மருத்துவமனை திருப்பத்தூர் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு அறைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. மேலும் 24 மணி நேரமும் சேவையாற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் அப்படி நடக்கிறதா என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் நோயாளிகளின் குரலாக ஒலிக்கிறது.

உள்நோயாளிகள் ஒரு பக்கம் புலம்பிவரும் நிலையில் புறநோயாளிகளின் வேதனைக்குரல் அதிக அளவில் உள்ளது. இதுபற்றி காலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளிடம் கேட்டபோது, ஐயா… காலையில் இருந்தே காத்துகெடக்குறோம். 24 மணி நேரமும் சேவைன்னு சொல்றது வெறும் வாய் வழி தகவலாக மட்டும் இருக்கிறதே தவிற, செயலில் காட்டுவது கிடையாது.
இப்ப மழைக்காலம் தொடங்கிருக்குது. கொசுக்கள் தொல்லை அதிகமாக இருக்குது. இதனால் காய்ச்சல் வந்துடுது. இதற்கு மருத்துவமனைக்கு வந்தா, டாக்டரயே காணோம். ரொம்பநேரம் காத்திருந்து நோய்தான் அதிகமாககுது. சாப்புடாம வெறும் டீயை மட்டுமே குடிச்சுட்டு காத்திருக்கிறோம். சிலருக்கு மயக்கமே வந்துடுச்சு…
இத மருத்துவமனையில் பணியாற்றும் நர்சுகள், பணியாளர்கள் பார்த்தும் கண்டுகொள்ளாமல் போகிறார்கள். டாக்டர்கள் வருவாரா என்று கேட்டால் வருவார் உக்காருங்க… என்று மதிப்பில்லாமல் பேசுகிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக அரசும் இதனை கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வயதான நோயாளிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings