in

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற அரசு அதிகாரி

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் கருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். திருமணமான இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். அரசு ஊழியரான ராஜேஷ், காஞ்சிபுரம் நில அளவை உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் இவர், பரந்தூர் விமான நிலைய திட்டம் நில அளவையில் பணியாற்றி வந்தார்.

இதே பகுதியில் கணவரை பிரிந்த பெண் ஒருவர் தனது 10 வயது மகள், 6 வயது மகனுடன் வசித்து வந்தார். வருமானம் இல்லாததால் குழந்தைகளை காப்பற்ற வேண்டும் என்பதற்காக கருக்குப்பேட்டை பகுதியில் தனது தாய் நடத்தி வரும் சிறிய டிபன் கடையில் தாய்க்கு ஒத்தாசையாக பணியாற்றி வந்தார். மனைவியைப் பிரிந்து வாழும் அரசு அதிகாரி ராஜேஷ், இந்த டிபன் கடையில் தினமும் சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் கணவனை பிரிந்த பெண்ணுக்கும் ராஜேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியது. அவ்வப்போது அந்த பெண்ணுடன் ராஜேஷ் சந்தித்து தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இந்த பழக்கத்தின் காரணமாக நில அளவை துறையில் தற்காலிக வேலை குறித்த அறிவிப்பு வந்தபோது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி கணவனை இழந்த அந்த பெண்ணுக்கு ராஜேஷ் நில அளவை துறையில் தற்காலிக வேலையும் வாங்கி கொடுத்துள்ளார்.

இதையடுத்து கணவனை இழந்த பெண்ணின் வீட்டிற்கு ராஜேஷ் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் 6 வயது மகனிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதை வெளியில் சொல்ல கூடாது என சிறுவனை தாக்கியுள்ளார். சிறுவனை தாக்கிவிட்டு அங்கிருந்து, ராஜேஷ் தப்பி சென்றுள்ளார். குழந்தைக்கு உடல்நிலை தான் சரியில்லை என நினைத்த தாய், மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணையை தொடங்கினர். கணவனை இழந்த பெண்ணின் மகளிடம் விசாரித்தபோது, அவ்வப்போது ஆபாச படங்களை சிறுவன் மற்றும் சிறுமி ஆகிய இருவருக்கும் ராஜேஷ் காண்பித்து பாலியல் தொல்லை தந்துள்ளது தெரியவந்தது.

இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இது தொடர்பாக கொலை வழக்கு மற்றும் போச்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு ராஜேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசு அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து சிறுவனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பொழிச்சலூரில் காமராஜருக்கு நாதக மரியாதை

தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பணியாற்றியவர்களுக்கு கேடயம்