சென்னை:
சென்னை தண்டடையார்பேட்டையில் சாகசம் செய்து அதனை வீடியோவாக வெளியிடுவதற்காக சரக்கு ரயிலில் ஏறிய கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலியானார். இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
சென்னை எல்லையம்மன் கோவில் தெருவை விவேகானந்தா அவென்யூவை சேர்ந்தவர் கவின் சித்தார்த் (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படித்து வந்தார்.
அனைவரும் ஏதாவது வீடியோ பதிவை எடுத்து அதனை சமூக ஊடகங்களில் உலாவவிட்டு வருவதால் இவருக்கும் அந்த ஆசை இருந்தது. சம்பவத்தன்று சென்னை தண்டையார்பேட்டையில் தனது நண்பர்கள் 3 பேருடன் நீச்சல் குளத்திற்கு குளிக்க சென்றார். அப்போது அருகில் உள்ள வ.உ.சி.நகர் ரயில்வே யார்டுக்கு சென்ற அவர், சாகச நிகழ்ச்சியை வீடியோவாக எடுக்க விரும்பினார். இதனால் ரயில்வே யார்டில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் டேங்க் மீது ஏறியபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு நண்பர்கள் தகவல் கொடுத்தனர். அங்கு வந்து சோதனை செய்தபோது, கவின் இறந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ரயில்வே யார்டு நிலைய அலுவலர் அனுராஜ் கவுதா, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கவின் சித்தார்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாகச நிகழ்ச்சி செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பரவ விடும் ஆசை உயிரையே குடித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings