புதுடெல்லி
நீட் தேர்வு எழுதிய 1,563 மாணவர்களுக்கு தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தெளிவுபடுத்தும் வரை இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்ததாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், நீட் தேர்வு குளறுபடியை சுட்டிக்காட்டியும் மறு தேர்வு நடத்த வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தேசிய தேர்வு முகமை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், தேர்வு மையங்களில் சில தேர்வர்கள் நேரத்தை இழந்ததால் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும், விசாரணைக் குழுவின் அறிக்கையின்படி, அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நேரக் குறைபாடால் பாதிக்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு ஜூன் 24ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும், விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என்றும் மறு நேர்வு முடிவுகள் 30ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மறுதேர்வுக்கான அறிவிப்பு ஆணையை இன்றேவெளியிட உத்தரவிட்டார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings