கரூர்:
பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோடியிலில் வைகாசி பெருவிழா ஆண்டு தோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 12-ம் தேதி கம்பம் நடுதலுடன் வைகாசி பெருவிழா தொடங்கியது.
கரூர் பாலம்மாள் புரத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி கம்பம் கொண்டு வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அமராவதி ஆற்றில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கம்பம் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு கோவிலில் நடப்பட்டது.
அன்று முதல் தொடர்ந்து 15 நாட்கள் நாள்தோறும் பக்தர்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான அமராவதி ஆற்றுக்கு கம்பம் அனுப்பும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோவிலில் இருந்து கம்பம் எடுக்கப்பட்டு அலங்கார ரதத்தில் பூசாரிகள் சுமந்தவாறு கம்பம் ஆற்றுக்கு அனுப்பப்பட்டது. முக்கிய விழாவான இதில் கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கம்பம் ஆற்றில் விடும் பகுதியில் கூட்டம் நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கூட்ட நெரிசலில் ஏற்பட்ட தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் திடீரென ஒரு பெண் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இந்த பெண்மணியை காவல்துறையினர் சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர்.
இதை செய்தி சேகரித்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வீடியோ எடுக்கவிடாமல் தடுத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேமானந்தன் என்பவர் செய்தியாளரை பார்த்து ஒருமையில் தரக்குறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிய காவல்துறையினர் தடிகளை தூக்கி மக்களை விரட்டி அடித்தனர். இதனால், மக்கள் அச்சத்தில் அங்குமிங்கும் ஓடி பொதுமக்கள் ஒருவருக்கு மேல் ஒருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் துறை அதிகாரிகள், அவர்கள் குறையை மறைக்க செய்தியாளர்களை மிரட்டிய செயலுக்கு உழைக்கும் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings