சென்னை:
கடந்த 2015 ஆம் ஆண்டு காவலர்கள் ரோந்து செல்வதற்காக தமிழ்நாடு அரசால் காவல் ரோந்து வாகன வழங்கப்பட்டது. இந்த வாகனம் அரசால் வழங்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிறது. பெட்ரோல் மூலம் இயங்கும் இந்த வாகனம் இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் மட்டுமே மைலேஜ் தருகிறது.
ஒரு சில நேரங்களில் முக்கிய இடங்களுக்கு இந்த வாகனம் செல்லும் போது திடீரென்று வழியில் நின்றுவிடும் அவல நிலையும் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் 100 எண்ணிற்கு கால் செய்து அவசர உதவி கேட்கும் பொதுமக்களுக்கு காவல் ரோந்து வாகனம் உடனடியாக செல்லாததால் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதேபோல் மீஞ்சூர் இ 3 காவல் நிலையத்திற்கு ஆவடி காவல் ஆணையரகத்தால் புதிய ரோந்து வாகனம் வழங்கப்பட்டது. சில நாட்களில் இந்த காவல் நிலையம் பொன்னேரி பகுதிக்கு மாற்றிய அதிகாரிகள், இங்கு சரியான ரோந்து வாகனத்தை வழங்கவில்லை. இதனால் மீஞ்சூர் பஜார், அரியன் வாயில், நந்தியம்பாக்கம், அனுப்பம்பட்டு, வண்ணிப்பாக்கம், மீஞ்சூர் வெளிவட்ட சாலை ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் இருந்த ரோந்து வாகனமும் தற்போது பழுதடைந்துள்ளது.
இதனால் ரோந்துப்பணி முடங்கியுள்ள நிலையில் சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. மீஞ்சூர் மிகப்பெரிய அளவிலான காவல் எல்லை கொண்ட பகுதியாக இருப்பதால் உடனடியாக புதிய ரோந்து வாகனம் ஒன்றை வழங்க தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்களும் வியாபாரிகளும் தொழிலதிபர்களும் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings