புதுடெல்லி:
டெல்லியில் இருந்து வாரணாசிக்கு செல்வதற்காக இண்டிகோ விமானம் இன்று காலை 5.35 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறிய நிலையில் திடீரென இண்டிகோ நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
அதில் இந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. விமான நிலைய கழிவறையில் உள்ள டிஷ்யூ பேப்பரில் இது எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு விமான பயணிகளை அவசர வழியில் பத்திரமாக வெளியேற்றினர்.
தொடர்ந்து தனி இடத்திற்கு விமானம் கொண்டு செல்ப்பட்டு வெடிகுண்டு நிபுணர்களால் முழுமையாக சோதனை செய்யப்பட்டது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings