in

விவசாயிகளை ஏமாற்றும் வேளாண் கடன் சங்கத்தை எதிர்த்து விருதுநகரில் தொடங்கிய போராட்டம் பரவுமா?

தலையங்கம்

விருதுநகர் மாவட்டத்தில் அது அடைந்தது. R 67 வள்ளியூர் வேளாண்மை தொடக்க கடன் சங்கம் விருதுநகர் அருகில் உள்ளது. இந்த தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் செயலாளராக பணிபுரியும் விஸ்வரூப கேசவன் என்பவர் தனது உதவியாளர்களுடன் இந்த தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் பல்வேறு வகையில் முறைகேடுகள் செய்து வந்துள்ளார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இதை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்களும் கண்டு கொள்ளவில்லை. இதில் முக்கியமாக பாதித்துள்ளது விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் 13 கிராமங்களின் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் வரவு செலவு கணக்கு வைத்துள்ளார்கள்.

நல்ல முறையில் இதுவரை இயங்கி வந்தது. தற்போது விவசாயிகள் சேமித்துள்ள சேமிப்புக் கணக்கிலிருந்து விவசாய வேலைக்காக பணத்தை எடுக்கச் செல்லும் போது, ‘இன்னும் ஒரு வார காலம் பிறகு வாருங்கள், இன்னும் இரண்டு நாள் கழித்து வாருங்கள்’ என்று இந்த சங்கத்தின் செயலாளர் விஸ்வரூப கேசவன் பதில் சொல்லி வந்த நிலையில் இதில் வரவு செலவு வைத்துள்ள பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரது  விருதுநகர்  அலுவலகத்துக்குச் சென்று ஒரு கோரிக்கை மனுவை விவசாயிகள் கொடுத்தனர். அந்த மனுவிற்கு சரியான பதிலும் அவர் சொல்லவில்லை. மறுநாளும் விவசாயிகள் சென்றுள்ளார்கள். மறுநாளும் மீட்டிங்கில் உள்ளார் மீட்டிங்கில் உள்ளார் என்றே பதில் சொல்கிறார்கள்..

இந்த நிலையில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் கூட்டுறவு சங்கப் பதிவாளரைச் சந்திக்கச் செல்லும் போது மீட்டிங்கில் உள்ளார், மீட்டிங்கில் உள்ளார் என்று அதே பதில் வருகிறது.

விவசாயிகளுக்கு உள்ள பிரச்சனைகளை தீர்க்காத கூட்டுறவு சங்க அதிகாரி எந்த நேரமும் மீட்டிங், மீட்டிங் என்று சொன்னால் விவசாயிகளை சந்திப்பது தான் எப்போது? அதனால்  விவசாயிகளை சந்திக்க மறுக்கும் கூட்டுறவு சங்கப் பதிவாளர் செந்தில்குமார் விவசாயிகளை சந்திக்க மறுப்பதில் ஏதோ மர்மமாக உள்ளது என்று ‘இனியும் இவரிடம் வந்தால் நீதி கிடைக்காது’ என்பதால், ‘விவசாயிகள் பெயரில் இருந்து கொண்டு, விவசாயிகளுக்கு பயன்படாத இந்த அலுவலகம் எதற்காக திறந்து இருக்க வேண்டும்? உடனடியாக பூட்டு போட்டுவிடலாம்’ என்று முடிவெடுத்தனர்.

கூட்டுறவு சங்கப் பதிவாளர் அலுவலகத்தை பூட்டும் நோக்கத்தில் விவசாயிகள் சென்றனர். இதைக் கேள்விப்பட்ட கூட்டுறவு சங்க பதிவாளர் செந்தில்குமார் உடனடியாக விவசாயிகளை அழைத்து ‘வாருங்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறேன்’ என்று சொல்லி பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்தப் பேச்சு வார்த்தையில் “நாங்கள் ஏற்கெனவே விஸ்வரூப கேசவன் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு கொடுத்துள்ளோம் அவருடைய சொத்துக்கள் அருப்புக்கோட்டை, விருதுநகர் போன்ற இடங்களில் உள்ளது. அதை முடக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் சொல்லி உள்ளோம்’ என்று விவசாயிகளிடம் தெளிவுபடுத்தினார்.

நீங்கள் விஸ்வரூப கேசவன் மீது புகார் மனு கொடுத்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது, இன்னும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத காரணம் என்ன? என்று விவசாயிகள் கேட்டனர். மேலிடத்தின் சிபாரிசில் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்கள் என்று அவரும் மறைமுகமாகச் சொன்னார்.

தவிர, விவசாயிகள் அல்லாத நபர்களுக்கு நகை கடன் கொடுத்துள்ளார் இந்த செயலாளர் விஸ்வரூப கேசவன். அந்த நகையும் கவரிங் நகை என்று அவர் மூலமாக மேலும் சில உண்மைகள் வெளியே வருகிறது. சுமார் ‘இரண்டு கோடி ரூபாய்க்கு போலி நகைகளை’ வைத்து நகைக்கடன் பெற்றுள்ளது தெரிகிறது. ஆனால் இந்த நகைக்கடன் வாங்கியது விவசாயிகள் இல்லை, விஸ்வரூப கேசவன் உருவாக்கிய சில நபர்கள் விவசாயிகளின் பணத்தை இந்த வேளாண்மை தொடக்க கூட்டுறவு வங்கியில் பல லட்சங்கள் வாங்கி உள்ளனர்.

இதை விவசாயிகளிடம் திருப்பிக் கொடுத்தால் தான் விவசாய வேலை செய்ய முடியும். பல்வேறு முறைகேடுகள் ஊழல் செய்த இந்த கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் விஸ்வரூப கேசவனும் அவருக்கு துணையாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்து அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தால் தான் மற்ற கூட்டுறவு வங்கியின் செயலாளர்களுக்கு அது ஒரு பாடமாக அமையும். போலி கவரிங் நகைகள் மூலம் விவசாயிகளின் பணம் எல்லாம் கையாடல் செய்து பல சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார். விருதுநகரிலும், அருப்புக்கோட்டையிலும் விருதுநகர் மாவட்ட காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் விவசாயிகளின் நகைகளும் சேமிப்பு பணமும் காப்பாற்றப்படலாம்.

ஆகையால் விருதுநகர் மாவட்ட காவல் துறையும் கூட்டுறவு பதிவாளர் அவர்களிடம் விஸ்வரூபம் கேசவனை கைது செய்ய வேண்டுகிறோம், இவ்வாறு தமிழ் விவசாயிகள் சங்கத்தலைவர் ஓ.ஏ. நாராயணசாமி கூறியுள்ளார்.

இன்னும் ஒரு வார காலத்திற்குள் விவசாயிகளுக்கு உண்டான சேமிப்பு பணமும் நகைகளும் விவசாயிகளிடமும் தொழிலாளர்களிடமும் திருப்பி வழங்கவில்லை என்றால் சிவகாசி, விருதுநகர் சாலையில் உள்ள வள்ளியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட செய்தி, அடிப்படையில் கிராமங்களில் இயங்கும் ஒரு ‘வேளாண் கடன் சங்கம்’ சம்பந்தப்பட்டதா? அங்கங்கே, மாநிலமெங்கும் இதுபோன்ற ‘ஊழல்வாதிகள் கையில் உள்ள சங்கங்களின் முன்னுதாரணமா?’ என்பதை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்யுமா?

தெ.சீ.சு.மணி

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தமிழகத்தில் 18ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை

மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவரை மிரட்டும் பிரபல ரவுடி: நடவடிக்கை எடுக்க எஸ்பியிடம் மனு