சென்னை:
சென்னையில் பேருந்து, ரயில், மெட்ரோ ரயிலில் ஒரே டிக்கெட்டில் பயணிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி நாம் அனைத்து பணிகளையும் சுலபமாக செய்ய நமக்கு பேருதவியாக அமைகின்றன. ஒவ்வொரு துறையாக தற்போது புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு வருகிறது. அதன்படி போக்குவரத்து துறையிலும் இந்த வசதி அறிமுகமாகிறது.
அதாவது தற்போது நடைமுறையில் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில், பறக்கும் ரயில்என்று தனித்தனியாக டிக்கெட் பெற்று பயணம் செய்கிறோம். இவற்றில் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் முறை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பிரத்யேகமாக செயலி ஒன்று உருவாக்குவதற்காக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டென்டர் கோரியிருந்தது.
இந்த நிலையில் வருகிற ஜூன் 2ம் வாரம் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பேருந்து, ரயில், மெட்ரோ ரயிலில் பயணிக்க பிரத்யேகமாக கார்டு ஒன்று அறிமுகப்படுத்தப்படஉள்ளது. இதனை ரீசார்ஜ் செய்து மக்கள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு எதில் பயணிக்க முடியுமோ அந்த போக்குவரத்து வசதியை பயன்படுத்திக் கொளள் முடியும்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings