in

பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை

மதுரை:

அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருக்கும் விளாம்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இன்று காலை வீட்டை திறந்து பார்த்தபோது கதவு திறக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார்250 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக அலங்காநல்லூர் காவல் நிலையத்தில்புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

கொள்ளையர்களை கண்டுபிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அருகே இருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் வீட்டிலேயே நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

எந்தெந்த மாவட்ட மக்கள் விண்வெளி ஆய்வு மையத்தை காணலாம்

சேரங்கோடு பஜாரில் அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழா