in

டிட்வா சூறாவளிக்குப் பின் மலைநாட்டு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

மலையகம்

“டிட்வா” சூறாவளிக்குப் பின்னர் மலைநாட்டு ரயில் சேவை பேராதனை/கம்பளை வரை மீண்டும் ஆரம்பம்

“டிட்வா” சூறாவளி நிலைமை காரணமாக ரம்புக்கனை – கணேபொல வரையிலான மலைநாட்டு ரயில் பாதையில் 103 இடங்கள் சேதமடைந்திருந்தன. இதில் 36 பாரிய மண்சரிவுகளும், மேலும் ரயில் பாதையில் கற்கள் மற்றும் மலைப்பகுதிகள் சரிந்து விழுந்த 67 சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

ரம்புக்கனை – கடுகன்னாவ ரயில் பாதையானது ரயில்வே திணைக்களத்தின் பாதை வலையமைப்பில் அதிக சாய்வு (Gradient) கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். அத்துடன், குறித்த பகுதிக்குச் செல்வதற்கு மாற்று போக்குவரத்து பாதைகள் இல்லாத நிலை, நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை ரயில் மார்க்கத்தின் ஊடாகவே கொண்டு செல்ல வேண்டிய நிலை போன்ற சவால்களுக்கு மத்தியில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரயில்வே திணைக்களத்தின் பாதைகள் மற்றும் கட்டமைப்பு உப திணைக்களம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து புனரமைப்பு பணிகளும் நிறைவு செய்யப்பட்டு, ரயில் பாதை போக்குவரத்துக்கு ஏற்ற நிலையில் மீண்டும் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டை – பேராதனை/கணேபொல இடையிலான வழக்கமான ரயில் சேவை 2026 ஒக்டோபர் 2ஆம் திகதி மாலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்பின்னர் பின்வரும் ரயில் நேர அட்டவணை நடைமுறைக்கு வரும்.

நகரங்களுக்கு இடையிலான ரயில் – இலக்கம் 1029

2026.10.02 முதல் – தினசரி

கொழும்பு கோட்டை புறப்படும் நேரம் – காலை 3.35

பேராதனை சென்றடையும் நேரம் – காலை 5.56

நகரங்களுக்கு இடையிலான ரயில் – இலக்கம் 1030

2026.10.03 முதல் – தினசரி

பேராதனை புறப்படும் நேரம் – காலை 6.25

கொழும்பு கோட்டை சென்றடையும் நேரம் – காலை 8.44

ரயில் இலக்கம் 1035

2026.10.02 முதல் – தினசரி

கொழும்பு கோட்டை – காலை 4.35

மருதானை – காலை 4.40

அலவ்வ – காலை 5.46

பொல்கஹவெல – காலை 5.56

ரம்புக்கனை – காலை 6.10

பேராதனை – காலை 7.17

கணேபொல சென்றடையும் நேரம் – காலை 7.51

ரயில் இலக்கம் 1040

2026.10.03 முதல் – தினசரி

கணேபொல – காலை 4.35

பேராதனை – காலை 4.56

ரம்புக்கனை – காலை 6.21

பொல்கஹவெல – காலை 6.34

அலவ்வ – காலை 6.45

மருதானை – காலை 7.59

கொழும்பு கோட்டை சென்றடையும் நேரம் – காலை 8.06

ரயில் இலக்கம் 1037

2026.10.02 முதல் – தினசரி

கொழும்பு கோட்டை – காலை 5.15

மருதானை – காலை 5.20

ரம்புக்கனை – காலை 6.48

பேராதனை – காலை 7.53

ரயில் இலக்கம் 1038

2026.10.03 முதல் – தினசரி

பேராதனை – காலை 4.40

ரம்புக்கனை – காலை 5.43

மருதானை – காலை 7.06

கொழும்பு கோட்டை சென்றடையும் நேரம் – காலை 7.12

பொடி மெனிகே ரயில் (இலக்கம் 1005/1006)

2026.10.03 முதல் – தினசரி

கொழும்பு கோட்டை → கணேபொல

கொழும்பு கோட்டை புறப்படும் நேரம் – காலை 5.55

பேராதனை – காலை 8.34

கணேபொல சென்றடையும் நேரம் – காலை 9.06

கணேபொல → கொழும்பு கோட்டை

கணேபொல புறப்படும் நேரம் – காலை 4.10

பேராதனை – காலை 4.31

கொழும்பு கோட்டை சென்றடையும் நேரம் – காலை 7.23

மேற்கண்ட ரயில் சேவைகள் தொடர்பான தகவல்களை ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பரவலாக அறிவிக்குமாறு ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

G.D.A. சமரசிங்க

அதிகாரி (போக்குவரத்து)

ரயில்வே பொது முகாமையாளர் சார்பில்

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சிறப்பாக நடைபெற்ற சீனன்கோட்டை கல்வி மைய கட்டட திறப்பு விழா

மோசமான வானிலையை எதிர்கொள்ள புதிய திட்டம் அவசியம்: சஜித்