அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்ட விவாதத்தில் இலங்கை சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் நியூயோர்க் தலைமையகத்தில் செப்டம்பர் 27ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள இக்கூட்டத்தொடர் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
“நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாற்றங்களை முகாமை செய்தல்: சகலருக்கும் பயனளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் உயர்மட்ட விவாதத்தில், நாளை திங்கட்கிழமை (28) அமைச்சர் விஜித்த ஹேரத் இலங்கையின் நிலைப்பாடு மற்றும் முக்கிய விடயங்கள் தொடர்பில் உரையாற்றவுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ், ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரிகள், பல்வேறு உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளையும் அமைச்சர் விஜித்த ஹேரத் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்புகளின்போது இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் மற்றும் சர்வதேச மட்டத்திலான முக்கிய விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings