in

பொரளை அஹதிய்யா பாடசாலையின் 40ஆவது நபி பிறந்ததின விழா

                   (ஏ.எஸ்.எம்.ஜாவித் )

பொரளை அஹதிய்யா பாடசாலையும் இஸ்லாமிக் கல்வி நிலையமும் இணைந்து 40வது வருடமாக நபியவர்களின் பிறந்ததினத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை (27) தெமடகொட எம்.ஐ.சி.எச்.பாஸா விலாவில் அஹதிய்யாப்பாடசாலையின் நிறுவுனரும் அதிபருமான சிப்லி ஹாசிம் தலைமையில் கொண்டாடியது.

நிகழ்விற்கு சர்வமத தலைவர்களான வண.கலாநிதி சஸ்தரபதி கலகம தம்மரன்சி நாயக்க தேரர், வண. சிவசிறி பாபுசர்மா குருக்கள், கலாநிதி அஸ்ஸெய்யத் ஹஸன் மௌலானா ஆகியோரும் பிரதம அதிதியாக மனித உரிமைகள் அமைப்பு இலங்கயின் தலைவர் கலாநிதி எம்.என்.எம்.அஸீம் மற்றும் அஹதிய்யாவின் பொருலாளர் அஸ்வர் ஹாஜியார், உள்ளிட்ட அஹதிய்யாவின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.

முதல் நிகழ்வாக சுபுஹான மௌழுத் மற்றும் கத்தமுல் குர்ஆன் நிகழ்வுகளும் மாணவர்களின் இஸ்லாமிய சமய நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து சமயத் தலைவர்களின் சமய ஆசீர்வாதங்களும் விசேட பேச்சுக்களும் பிரதம அதிதியின் பேச்சும் இடம்பெற்றன.

இதன்போது சர்வமத தலைவர்கள் அஹதிய்யா அதிபரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் அஹதிய்யாவின் அதிபர் சிப்லி ஹாசிம் பொரளை அஹதிய்யாப் பாடசாலையை சிறப்பாக வழிநடாத்தி சேவை செய்து வருவதை முன்னிட்டு சர்வமத தலைவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து நாட்டு மக்களின் அமைதி, சமாதானம் வேண்டியும், அஹதிய்யா மாணவர்கள், அஹதிய்யாவுக்கு உதவி செய்து மறைந்த மற்றும் உதவி செய்து வரும் நலன் விரும்பிகளின் விமோசனத்திற்காகவும் விசேட துஆப் பிரார்த்தனையை கலாநிதி அஸ்ஸெய்யத் ஹஸன் மௌலானா மேற்கொண்டார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஐ.நா. பொதுச்சபையில் விஜித்த ஹேரத் நாளை உரையாற்றுகிறார்

கற்பிட்டியில் இடம்பெற்ற உலக சுற்றுலா தினக் கொண்டாட்டம்