இலங்கை கடலோர பாதுகாப்புத் திணைக்களத்துக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில், பேருவளை பொலிஸ் நிலைய அதிகாரிகளுடன் இணைந்து 2026 செப்டெம்பர் 23ஆம் திகதி பேருவளை பகுதியில் விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, விற்பனைக்காக தயார்படுத்தப்பட்ட நிலையில் ஒரு வீட்டினுள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 34.31 கிராம் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருளும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பேருவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



GIPHY App Key not set. Please check settings