in

ஹெரோயினுடன் கைதான 38 வயது நபர்

               ( பாறுக் ஷிஹான்)

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் 07 ஆம் பிரிவில் 3 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 38 வயதுடைய சந்தேகநபர் விசேட அதிரடிப்படையினரால் (STF)   செவ்வாய்க்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இச் சந்தேகநபர் வலையில் வீழ்ந்துள்ளார்.

 நிந்தவூர் 07 ஆம் பிரிவைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையின் போது சந்தேகநபரிடமிருந்து 3 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினரால் இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை வெற்றிடமாகக் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிந்தவூர் பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

திலீபனுக்கு ஏன் சிலை வைக்க முடியாது?

சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கைது