ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 15 பேருக்கு 220 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்க கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டது.
மேலும், இந்தத் தருணத்திலிருந்து அவர்களது அசையும் மற்றும் அசையா சொத்துகளை அரசுடைமையாக்கவும் உத்தரவிடப்பட்டது.
269 பேரின் உயிரைப் பறித்தும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடையவும் காரணமான ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பின்படி தண்டனைகளை அறிவித்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும், இதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட மேலும் 9 பேரை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என விடுவித்தது.
Must Read – அனோஜன் விடுதலை- இந்து மதபீடம் ஆசீர்வாதம்

GIPHY App Key not set. Please check settings