அனோஜனின் விடுதலைக்காக ஜனாதிபதியின் ராஜதந்திர நடவடிக்கைகள் வெற்றி பெற வேண்டும் – சர்வதேச இந்து மத பீடம் தெரிவிப்பு
அண்மையில் சவுதியில் மதநிந்தனையின் அடிப்படையின் கீழ் மரண தண்டனையை எதிர்நோக்கும் நற்பிட்டிமுனை சிவராஜா அனோஜனின் பெற்றோர்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வை சந்தித்து தங்களது மகனின் விடுதலைக்காக ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு விடுவிக்க வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டனர் .
கருணையுடன் ஜனாதிபதி அவர்களின் மன கவலையை உணர்ந்துக்கொண்டத்துடன் மேலும் இது சம்மந்தமாக சவுதி மன்னருடன் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு நல்ல முடிவை பெற்று தரலாம் என்ற நம்பிக்கையை அவர் பெற்றோர் மனதில் விதைத்துள்ளார்.
மக்களுக்காகவே ஆட்சி என்ற ஜனாதிபதியின் உன்னதமான கொள்கைக்கு அமைய இந்த மனோஜனின் விடுதலைக்காக அவர் எடுக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக அமைந்து இலங்கை நாட்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை ஏற்படுத்தி தருவார் என்ற நம்பிக்கையுடன் அவரது முயற்சிகள் வெற்றியளிக்க வேண்டும் என சர்வதேச இந்து மதபீடம் அவருக்கு ஆசிகளை வழங்குகியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings