in

நலிந்த ஊடகவியலாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில், நலிந்த ஊடகவியலாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டத்தின் எட்டாம் கட்ட நிகழ்வு இன்று (19.09.2026) நடைபெற்றது.

இதன்போது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் தயாரிப்பாளர் மர்ஹூம் முஹம்மத் இர்பானின் புதல்வி பாத்திமா சப்ரினா மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கலைஞர் துல்பிகா அன்வர் ஆகியோருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் மொத்தமாக இரண்டு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஹாஷிம் உமர் பௌண்டேசனின் நிறுவுனரும் புரவலருமான ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பௌண்டேசன் பணிப்பாளர் மரியம் ஹாஷிம், தமிழன் பத்திரிகையின் இணை செய்தி ஆசிரியர் ஜவுபர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் முஹம்மது ரளீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஊடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை மதிப்பதுடன், நலிந்த நிலையில் உள்ள ஊடகக் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஹாஷிம் உமர் பௌண்டேசனால் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டத்தின் தொடர்ச்சியாக எட்டாம் கட்ட நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கோவையில் சிவசேனா சார்பில் விநாயகர் ஊர்வலம்

கொழும்பு ஹைரியா பெண்கள் கல்லூரி விருது வழங்கும் நிகழ்வு