( பேருவளை பீ.எம். முக்தார் )
களுத்துறை கல்வி வலையத்திற்குட்பட்ட பேருவளை சீனன் கோட்டை ஆரம்ப பாடசாலையின் மீலாதுன் நபி பரிசளிப்பு வைபவம் பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி ஜெஸீலா தலைமையில் நேற்று மாலை (15.09.2026) நடைபெற்றது.
சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் விழாவில் பிரதம அதிதியாகவும் தர்கா நகர் தேசிய கல்வியற் கல்லூரி தலைவர் பீ. ரிஸ்வி கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
பாடசாலை சிறார்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு பரிசில்களும் வழங்கப்பட்டன.
பேருவளை நகரபிதா மபாஸிம் அஸாஹிர், சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளர் அல்ஹாஜ். எம்.எம்.எம். ஷிஹாப், இணைப் பொருளாலர் அல்ஹாஜ் ஏ.இஸட்.எம். ஸவாஹிர், அஷ்ஷெய்க் அல்ஹாஜ் மக்கீ மன்ஸுர் (நளீமி) பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ரிஸ்வான் பாஸி, அக்கரகொட தாஜுல் மபாஹிரியா ஷாதுலியா ஸாவியா மஸ்ஜித் இமாம் மௌலவி எம். அஸ்லம் (முஅய்யிதி) உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings