in

ஜேர்மன் பாராளுமன்ற தூதுக்குழு சஜித் பிரேமதாசவுடன் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஜேர்மன் கூட்டாட்சியின் தெற்காசிய பாராளுமன்ற தூதுக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (15) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான பாராளுமன்ற உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், திறன்கள், அறிவு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முன்னோக்கிச் செல்லும் கூட்டாண்மையை உருவாக்குவது குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சியை நோக்கி இலங்கை செல்வதற்கான அவசியம், தொழில்நுட்ப மற்றும் தொழிற்திறன் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், காலநிலைக்கு ஈடுகொடுக்கும் இயலுமை, நிலைபேறான அபிவிருத்தி மற்றும் இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் மூலோபாய அமைவிடத்தை மிகவும் திறம்பட பயன்படுத்துவதன் முக்கியத்துவம் ஆகியவற்றை எதிர்க்கட்சித் தலைவர் ஜேர்மன் தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டினார்.

திறன்கள் மற்றும் தொழில்நுட்பம், பசுமை மாற்றம், கடல்சார் மற்றும் நீலப் பொருளாதார மேம்பாடு போலவே இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான பாராளுமன்ற உரையாடல்களை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் மேலும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். 

உற்பத்தித் திறன், வேலைவாய்ப்பு வாய்ப்புகள், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் நீண்டகால பொருளாதார மதிப்பைக் உருவாக்கும் கூட்டாண்மைகளில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என்றும், நாட்டின் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாத்து தேசிய மீள்திறனை வலுப்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சிநேகபூர்வமாகவும் ஆக்கபூர்வமான முறையிலும் இடம்பெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான தொடர்ச்சியான தொடர்புகளை மேலும் பேணுவது குறித்து இரு தரப்பினரின் கவனமும் திரும்பியது..

இந்நிகழ்வில் ஜெர்மன் தூதுக்குழுவைச் சேர்ந்த Mr. Nicklas Kappe (Head of the Delegation and Member of Parliament), Mr. Gerold Otten (Member of Parliament), Mr. Johann Saath (office Member of Parliament), Ms. Ulle Schauws (Secretary of the delegation) மற்றும் Ms. Katerina Bienert ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹஷீம், காவிந்த ஜயவர்தன, சமிந்திரானி கிரியெல்ல மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண ஆகியோருடன் குசும் விஜேதிலக்க, பேராசிரியர் கென்னடி குணவர்தன, பேராசிரியர் மஹிம் மெண்டிஸ், தலல் ராபி, திலும் அலகியவன்ன, சரண கானங்ககேமகே மற்றும் மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பேருவளை சீனன்கோட்டை ஆரம்ப பாடசாலையில் மீலாதுன் நபி விழா

மன்னார் பொது மருத்துவமனையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அட