விளையாட்டை மையப்படுத்தி இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தொழிலதிபரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கரண் கந்தையா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ராஜ் சிவராஜ் அவர்களின் இயக்கத்தில், இசையமைப்பாளர் பூவன் மதீசன் அவர்களின் இசையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ரீகன் கந்தையா நடித்துள்ளதுடன், Zee Tamil தொலைக்காட்சியின் ‘மகாநடிகை’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை நிவேதிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
திரைப்படத்தில் இடம்பெறும் ‘முட்டக் கண்ணைக் காட்டி என்னைப் பத்து வச்சா’ என்ற பாடலை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார். பாடல் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.
இசை வெளியீட்டு விழாவில் திரைப்படக் குழுவினர், கலைஞர்கள், திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துகொண்டனர். கவிஞர் பொத்துவில் அஸ்மினும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings