புத்தளத்தைச் சேர்ந்த முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிறுவனங்களுக்குமான தேசிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகாலம் முதல் புத்தளம் மாவட்டத்தில் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்த நியாஸ் அவர்கள் முன்னாள் புத்தளம் பிரதேச சபை உறுப்பினராகவும், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண சபையில் அவர் இரண்டு தடவைகள் உறுப்பினராகப் பதவி வகித்துள்ளதுள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் கட்சியின் அமைப்பு நடவடிக்கைகளிலும் அவர் முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளதுடன்,குறிப்பாக, முன்னாள் மாகாண சபை உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் மக்களுக்கான பல்வேறு சமூக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நிறுவன நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் அவருக்கு தேசிய அளவிலான புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings