அரசியல் செய்தி
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பையேற்று தமிழ் நாட்டு சிறுபான்மை நலத்துறை மற்றும் வக்பு வாரிய அமைச்சர் ஏ.எம் ஷாஜஹான் கொழும்பை வந்தடைந்தார்.
இலங்கை வந்துள்ள தமிழக அமைச்சர் தலைமையிலான குழுவினரை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அக்கட்சியின் வெளிநாட்டு விவகார பணிப்பாளரும் முன்னாள் கல்முனை மேயருமான சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
தமிழக அமைச்சர் ஷாஜஹானுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் நாடு மாநில துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்றாஹீம், தென்காசி மாவட்டச் செயலாளர் செய்யது பட்டானி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பு அணியான மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் ஷபீக் அஹமது மற்றும் மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. சாஹூல் ஹமீத் ஆகியோரும் இலங்கை வந்துள்ளனர்.
இன்று 16 ஆம் திகதி புதன்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா அரங்கில் நடைபெற உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டினை தொடர்ந்து மாலை இடம் பெறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகர் தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எச். எச். எம். அஷ்ரப் அவர்களின் 26 ஆவது நினைவு தின நிகழ்வில் பிரதம உரையினை தமிழ் நாட்டு சிறுபான்மை நலத்துறை மற்றும் வக்பு வாரிய அமைச்சர் ஏ.எம் ஷாஜஹான் ஆற்ற வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
This post was created with our nice and easy submission form. Create your post!
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பையேற்று தமிழ் நாட்டு சிறுபான்மை நலத்துறை மற்றும் வக்பு வாரிய அமைச்சர் ஏ.எம் ஷாஜஹான் கொழும்பை வந்தடைந்தார்.
GIPHY App Key not set. Please check settings