in

பங்களாதேஷ் புதிய தூதுவருக்கு சர்வமத தலைவர்கள் வாழ்த்து

Bangaladesh

 

கொழும்பில் அமைந்துள்ள பங்களாதேஷ் தூதரகத்தில் இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்ட சலாகுதீன் மஹ்மூத் அவர்களை சர்வமதத் தலைவர்கள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இச்சந்திப்பில் வணக்கத்துக்குரிய கலகம தர்ம ரன்சி தேரர், கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, அல் ஹாஜ் ஹசன் மௌலானா மற்றும் சகாயராஜா அன்ரனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, புதிய தூதுவருக்கு தங்களது வாழ்த்துக்களையும் நல்லெண்ணத்தையும் தெரிவித்த சர்வமதத் தலைவர்கள், இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடினர்.

குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையே மத நல்லிணக்கம், சமயங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

இதன்போது, கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, பங்களாதேஷ் தூதுவர் சலாகுதீன் மஹ்மூத் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் மக்களுக்கிடையிலான நட்புறவு மற்றும் மத நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இச்சந்திப்பு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

22ஆவது திருத்தத்தை ஆட்சிக்கு வந்ததும் நீக்குவோம்: சஜித் பிரேமதாச

அனோஜனின்  மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்- மன்னாரில் சர்வமத தலைவர்கள் கோரிக்கை