கோவை:
கோவையில் விமான நிலையப் பகுதியில் நேற்று முன் தினம் இரவு கல்லூரி மாணவி அவரது ஆண் நண்பரும் காரில் அமர்ந்து தனிமையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள், கல்லூரி மாணவியின் நண்பரை தாக்கிவிட்டு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே பதறவைத்துள்ளது. இதில் ஈடுபட்ட காமக்கொடூர இளைஞர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் வெள்ளைகிணறு பகுதியில் இவர்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் ஒரு காவலரை தாக்கிவிட்டு அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்த போலீசார், மூவரையும் காலில் சுட்டுப் பிடித்தனர். இதையடுத்து நடந்த விசாரணையில், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.கோவில்பட்டியை சேர்ந்த தமிழ்மணி என்பவரது இரண்டாவது மனைவி அருக்கானியின் மகன்கள் சதீஷ் என்ற கருப்பசாமி, கார்த்திக் என்ற காளீஸ்வரன் சகோதரர்கள் மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த குணா என்ற தவசி என்பதும் தெரியவந்தது.
இதனை அடுத்து எஸ்.கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது தெய்வீக கிராமத்தின் பெயரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தங்கி இருந்து சென்றவர்கள் கெடுத்துவிட்டதாக மன வேதனையில் உள்ளனர். எஸ்.கோவில்பட்டியை சேர்ந்த தமிழ்மணி என்பவர் கூலி வேலைக்காக கேரளா சென்ற போது அருக்கானி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து எஸ்.கோவில்பட்டியில் குடியிருந்துள்ளனர். கருப்பசாமி, காளீஸ்வரன் இவர்கள் குடும்பத்துடன் 5 வயதிலேயே கோவை சென்றுவிட்டதாகவும் இந்த கிராமத்திற்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த கிராமத்தில் உள்ள செகுட்டு அய்யனார் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவில். இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவர்கள் யாரும் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுவது கிடையாது. தாங்கள் தெய்வத்துக்கு கட்டுப்பட்டு தெய்வீக பூமியில் வாழ்ந்து வருகிறோம். இவர்கள் இங்கு பிறந்ததை நினைத்து நாங்கள் வருத்தப்படுகிறோம். இந்த கொடூர செயலில் ஈடுபட்டு எங்கள் ஊர் பெயரை கெடுத்த இவர்களை சுட்டு கொன்றால் மிகவும் சந்தோசப்படுவோம் என கிராம மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings