ராமநாதபுரம்:
இறை தூதர் முகமது நபிகள் பிறந்த நாளை மீலாது நபி விழாவாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நபிகள் நாயகம் பிறந்த நாளான மீலாது நபி விழா 17-ஆம் தேதியான இன்று கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முகம்மது சலாகுதீன் அய்யூப் அறிவித்து இருந்தார்.
அதன் அடிப்படையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மீலாது நபி விழாவை முன்னிட்டு “18 வாலிபர்கள் தர்கா” வளாகத்தில் உலக நன்மை வேண்டி அனைத்து சமுதாய மக்கள் ஒற்றுமைக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து நபிகள் நாயகத்துக்கு புகழ் மாலை ஓதப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட அனைத்து சமுதாய ஏழை எளிய மக்களுக்கும் நெய் சோறு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜக்காத் கமிட்டி தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் ஜகாத் கமிட்டி நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings