சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ளது. இது அடுத்த இரு தினங்களில் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும்.
இதனால் இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வருகிற 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings