சென்னை
தனி மனிதனின் பேராசையை நிறைவேற்ற உடந்தையாக செயல்பட்டு வரும் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையால் தமிழ்நாடு அரசின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வருவாய்த்துறை மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி, ஆகிய இரண்டு அரசு இயந்திரங்கள் பணத்தைக் காட்டி மயக்கும் மோசடி பேர்வழிகளுக்கு மாவு அரைத்துக் கொண்டிருக்கிறது.
இதைப் பற்றி ஏற்கனவே உள்ளாட்சிமுரசு நாளிதழ் மற்றும் துப்பறியும் விசாரணை மாத இதழில் ”சுயநலத்திற்காக சட்ட விதிகளை மீறும் அரசு அதிகாரிகள்” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அந்த இடத்தின் பவர் ஏஜெண்ட் இந்துமதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்த நிலையில், நில ஆக்கிரமிப்பு செய்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் 3வது மண்டலம், 24வது வார்டு எல்லைக்கு உட்பட்ட புழல் புனித அந்தோனியார் கோயில் மெயின் தெரு பகுதியில் கட்டிட அனுமதி இல்லாமல் அத்துமீறி வீடு கட்டிய சந்திரன் மற்றும் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு அரசு துறைகளும் வழக்கில் சேர்க்கப்பட்டன.
இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்து மிக உன்னிப்பாக விசாரித்த அமர்வு நீதிபதிகள் விசாரணைக்கு பின்னர், முன்னுதாரணமாகவும், பிற்காலத்தில் வழக்கறிஞர்கள் குறிப்பு எடுத்துக் கொள்ளும் வகையிலும் நடுநிலை உத்தரவை பிறப்பித்தனர்.
அமர்வு நீதிபதிகளின் ஒருமித்த உத்தரவு அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல அடாவடியாக ஆக்கிரமிப்பு செய்யும் சட்ட விதிகளை மீறும் பேர்வழிகளுக்கும் பாடமாக அமையும்படி இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதம் 2024 ஆம் ஆண்டு பிறப்பித்த அமர்வு நீதிபதிகளின் இந்த உத்தரவு இதுவரை சம்பந்தப்பட்ட அரசு துறை செயல்படுத்தவில்லை.
காரணம் இல்லாமல் காலம் கடத்தி வந்த, மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இதுவரை சந்திரனை காப்பாற்ற முயற்சித்து செய்து வருவதாகவே தெரிகிறது.
இந்நிலையில் ஒரு வழியாக ரிட் மனுவின், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் முன்வந்த நிலையில், சீல் வைக்க போலீஸ் பாதுகாப்பு கேட்டு மாநகராட்சி மூலம், புழல் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காவல் நிலையத்திலும் சந்திரனின் பணம் மற்றும் அவரது மைத்துனர் உதவி ஆய்வாளர் அந்தோணிதாசின் அதிகார தலையீட்டால், மாநகராட்சி பாதுகாப்பு கேட்டு கொடுத்த மனு, உயர் அதிகாரிகளால் மறைக்கப்பட்டு, பாதுகாப்பு கொடுப்பது தள்ளி போடப்பட்டது.
பொறுமை இழந்த பாதிக்கப்பட்டவர்கள், உதவி கமிஷனர் சகாதேவனை சந்தித்து அவரிடம் நிலைமை குறித்து விளக்கினர். அவர் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டததை தொடர்ந்து, இரண்டு முறை நாள் குறிக்கப்பட்டு, காரணம் இல்லாமல் அதுவும் தள்ளி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சீல் வைக்க நாள் குறித்த இரண்டு நாட்களுக்குள், சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் கட்டிய வீட்டை சீல் வைக்க கூடாது, இடிக்க கூடாது என்று ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் புழல் உதவி கமிஷனருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரிடம் கேட்டபோது, இது அமர்வு நீதிபதிகள் போட்ட உத்தரவு. இது குறித்து நேரடியாக விமர்சனம் செய்யக்கூடாது, உத்தரவு மிகத் தெளிவாக உள்ளது. இதை இரண்டு அரசுத்துறைகளும் சரியாகப் புரிந்து பின்பற்றி இருக்க வேண்டும். ஆனால் இதுவரை பின்பற்றவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள்.
அப்படி பார்த்தால் உத்தரவு போட்ட அமர்வு நீதிபதிகள் நேராக வந்து, அவர்கள் போட்ட உத்தரவு குறித்து, அரசு அதிகாரிகளுக்கு விளக்கி சொன்னால் மட்டுமே அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களோ என்றே நினைக்க தோன்றுகிறது.
நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், கண்டனத்திற்கு உள்ளாகும் தமிழ்நாடு அரசின் வழக்கமான போக்கை அதிகாரிகளும் பின்பற்றுகிறார்கள் என்றே தெரிகிறது.
நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும் நிலை உள்ளது. இந்த நடைமுறை மாற வேண்டும். நீதிமன்ற உத்தரவை அரசு மட்டுமல்லாமல் அதிகாரத்தில் உள்ள அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார்.
”ஏழை சொல் அம்பலம் ஏறாது”
சந்திரன் ஆக்கிரமித்த இடம் ஏழைகளுக்கு சொந்தமானது என்பது தெரிந்தே, அனுபவ முறையில் உத்தேசப் பட்டா வாங்கி அதை முறைப்படுத்த, போலி ஆவணங்கள் தயாரித்து அந்த இடத்தில் கட்டிடம் கட்டிய சந்திரன் இதுவரை நீதிமன்றம் மூலம் போராடி, அரசு துறைகள் மூலம் தன் பண பலத்தை காட்டி ஜெயிக்க முயற்சித்து வருகிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
சந்திரன் ரிட் மனுவிற்கு பதிலளித்த நீதிபதிகள், அந்த ,வழக்கில் ஏற்கனவே அறிவுரை கூறிவிட்டோம். அதை செயல்படுத்துங்கள். உங்களுக்கு கால அவகாசம் தருகிறோம். அதற்குள் உங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை என்றால் அந்த கட்டிடத்தை இடிக்க உத்தரவிடப்படும் என்று நீதிபதிகள் கூறியதாக தெரிய வருகிறது.
பதிவு செய்யப்படாத ஆவணம், முறையில்லாத பட்டா இப்படி ஏராளமான தவறான ஆவணங்கள் உள்ள இந்த விவகாரம் இரண்டு நபர் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. இந்த வழக்கில் அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கை மட்டுமே குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாக உள்ளது.
அதிகாரிகள் முறையாக நடந்திருந்தால், தவறான பட்டா வழங்கப்பட்டு இருக்காது. அனுமதி இல்லாத கட்டிடம் கட்டி இருக்கவும் முடியாது. அப்படியே அத்துமீறி கட்டி இருந்தாலும் இடிக்கப்பட்டு இருக்கும். இப்படி எதுவுமே நடக்காமல்
நீதிமன்றத்தை நாடி, நீதிமன்ற நேரத்தை வீணடித்து, தன் பேராசையை நிறைவேற்றிக் கொள்ள அடுத்தவர்களை துன்புறுத்தும் சுயநல நபருக்கு நீதிமன்றம் தக்க தீர்ப்பளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்பாக உள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings