in

நடிகர் நாக சைதான்யா, நடிகை ஷோபிதாவுக்கு நிச்சயதார்த்தம்

நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகர் நாகார்ஜூன் மகன் ஆவார். இவரும் நடிகராக களம் இறங்கினார். இவருடன் நடிகை சமந்தா நடிக்கும்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் திருமணத்தில் முடிந்தது. கொஞ்ச காலம் நிம்மதியாக வாழ்ந்த இவர்கள் மத்தியில் விரிசல் விழுந்தது. இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து நாக சைதன்யாவுக்கும் ஷோபிதா துலிபலாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக பேசப்பட்டது. இவர்கள் இணைந்து டேட்டிங் சென்ற புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நடிகர் நாகார்ஜூனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருவரது புகைப்படங்களையும் பகிர்ந்து என் மகன் நாக சைதன்யாவுக்கும் ஷோபிதா துலிபலாவுக்கும் இன்று காலை 9.42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம். ஷோபிதாவை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. வாழ்நாள் முழுவதும் இவர்களுக்கு அன்பும் காதலும் இருக்க எங்கள் வாழ்த்துக்கள். முடிவில்லாத காதலின் தொடக்கம் என்று பதிவிட்டுள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

24 காவல் உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

முதல் அரிசி ஏ.டி.எம். மையம் திறப்பு… எங்கே தெரியுமா?