in

போலீ பத்திரம் மூலம் ரூ.51 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனையை அபகரித்த 2 பேர் கைது

ஆவடி

ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்றப் பிரிவில் டி.ஆர்.டி.ஏ. விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஏ.ஆர். பாலசுப்பிரமணியம். இவர் ஆவடி கவரப்பாளையம் பஜனை கோவில் தெரு பகுதியில் பரம்பரை பரம்பரையாக வசித்து  வருகிறார். மத்திய குற்றப்பிரிவில் அவர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், ஆவடி தண்டுரை மாடர்ன் சிட்டி போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன பணியாளர்களின் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் மூலமாக ஆவடி துணைப்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2000ம் ஆண்டு 2340 சதுர அடி காலி மனை கிரையம் பெற்று அனுபவத்தில் வைத்துள்ளேன். அந்த இடத்தில் அழகிய வீடு கட்டலாம் என வில்லங்கச் சான்று போட்டு பார்த்ததில் 2023ம் ஆண்டு பரசுராமன் என்பவனுக்கு நான் பொது அதிகாரம் கொடுத்ததாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவாகி உள்ளது.

பொது அதிகாரத்தில் சாட்சிகளாக சரவணன் என்பவர் கையெழுத்து போட்டு உள்ளார். கடந்த 2.4.2024ம் தேதி பரசுராமன் அவனது மனைவி சகுந்தலா என்பவளுக்கு கிரயம் செய்துள்ளது தெரிய வந்தது. என்னை ஏமாற்றி போலியாக பத்திரம் பதிவு செய்து மதிப்பு ரூ.51 லட்சம் ஆகும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி நில பிரச்சனை தீர்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி அதிரடி விசாரணை நடத்தி வந்தார். இதையடுத்து சென்னை பட்டாபிராம் அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்த கண்ணப்பன் மகன் சரவணன், சென்னை ஆவடி ராஜீவ் காந்தி நகர், சீனிவாச தெருவை சேர்ந்த சேவியர் மகன் பால்ராஜ் (29) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வினேஷ் போகத் தகுதி நீக்கம்… எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு

மளிகை பொருட்கள் விநியோகிப்பதாக ரூ.1.70 கோடி ஏமாற்றிய பலே மோசடி மன்னன் கைது