in

மாணவர்களுக்கான “தமிழ்ப் புதல்வன்” திட்டத்திற்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு

சென்னை:

மாணவர்களுக்கான ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

எப்படி பெறுவது?

இந்த திட்டத்தின் பயன்களை எப்படி பெறுவது என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுளள்து.

அரசுப்பள்ளி (ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம்), அரசு உதவி பெறும் பள்ளி (தமிழ் மீடியம் மட்டும்) படித்துளள் மாணவர்கள் தங்களின் இங்களை பட்டம், தொழிற்பயிற்சி, பட்டயக் கல்வி ஆகியவற்றை பெறும் காலம் வரை ரூ..1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

அதன்படி இந்த திட்டம் முழுமையாக மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படுவதால் ஆதார் எண் கட்டாயம் என்றும், கல்வி நிறுவனங்கள் தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தகவல் அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, மாணவர்கள அருகில் உள்ள ஆதார் மையங்களில் ஆதார்அட்டை பெற பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் ஆதார் மையம் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கனிம வளங்களுக்கு வரி விதிப்பு யாருக்கு அதிகாரம்…? உச்சநீதிமன்றம் அதிரடி

சென்னை மாநகர் நம் அனைவருக்கும் உரியது