மலேசியா:
மலேசியாவின் கோலாம்பூர் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்க டான்ஸ்ரீ சோமா அரங்கத்தில் அண்ணாமலை கவிதைகள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் மஇகா தேசிய துணைத்தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்ச் சமுதாயம் அனைத்து வகையிலும் மேம்பட்ட நிலையை அடைய கவிதை புனைந்தவர்களில் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து, ஆலந்தூர் கோ.மோகனரங்கன் போன்ற பல கவிஞர்களை குறிப்பிடலாம்.
தற்போதுள்ள தமிழ்த் திரைப்படப் பாடல்களை அறவே கேட்க முடியவில்லை. ஆனால். கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அர்த்தமுள்ளவையாக இருந்தன. காதலன், காதலி, கணவன், மனைவி உறவை இலை மறை காயாக பொருள் பொதிந்து எழுதியவர் கண்ணதாசன்தமிழ்ச் சமுதாய சிந்தனையும் அதாவது தமிழ்மொழி, தமிழர்கள், தமிழர் நலன். சமூக அக்கறை பாடல்களை இன்றைய தலைமுறைக் கவிஞர்களும் தொடர்ந்து எழுதி வர வேண்டும்.
அந்த வகையில் அண்ணமலை கவிதைகள் தமிழ்ச் சமுதாயம் எழுச்சி பெறுவதற்கு துணை புரியும் என்று நம்புகிறேன். இது அண்ணா மலையின் முதல் கவிதை நூலாகும் என்று டத்தோஸ்ரீ சரவணன் தமதுரையில் கூறினார்.
நூல் வெளியீட்டு விழாவில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க முன் னாள் தலைவர் பெ. இராஜேந்திரன் உட்பட திரளான வாசகர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் மலேசிய இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து கலந்து கொண்டார்.
மேலும் மலேசிய அமைப்புகளுடன் இணைந்து இவ்விழாவை நடத்தியது முனைவர் மோ.பாட்டழகன் பங்கேற்று நூல் குறித்து அறிமுகவுரையாற்றினார். வழக்கறிஞர் பா. ச. அகிலன் நன்றி கூறினார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings