சென்னை
நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றுகையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். விடுதலையை பாடுபட்டு பெற்றுத்தந்த தியாகிகளை போற்றுவோம். அவர்கள் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிப்போம்.
மாநில அமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத்தந்தவர் கருணாநிதி. 4வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெரும அடைகிறேன். நமது பன்முகத்தன்மையின் அடையாளம் தேசிய மூவர்ண கொடி.
நேதாஜியின் இந்திய விடுதலை படையில் கரம் கோர்த்தவர்கள்தான் தமிழர்கள். 2026 ஜனவரிக்குள் 75 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
பரந்தூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க உள்ளோம். குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி தொழில்பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது. முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும். பொங்கல் திருநாள் முதல் முதல்வர் மருந்தகம் திட்டம் செயல்படுத்தப்படும்.
முதல்வர் மருந்தகம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும். முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்ய அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஆய்வூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
கட்டபொம்மன், மருது சகோதரர்கள், ராமநாதபுரம் மன்னர் விஜயரகுநாத சேதுபதி, வ.உ.சி. வழித்தோன்றல்களுக்கு ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.10,500 ஆக உயர்த்தப்படும். விடுதலை போராட்ட வீரர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.1 ஆயிரத்தில் இருந்து ரூ.11,500ஆக உயர்த்தப்படும் என்றார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings