( மன்னார் செய்தியாளர் )
மன்னாரில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (26) காலை 11 மணியளவில் இடம்பெற்ற.
இதன் போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு திலீபனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.குறித்த அஞ்சலி நிகழ்வில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கப் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
1987 ஆம் ஆண்டு 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்து தன்னுயிரை ஈந்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 26 வரை உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings