in

காலி மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள்

வறுமையை ஒழிப்பது புதிய அரசாங்கத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என “வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கைப் பிரகடனத்தின் “பாதுகாப்பான சமூகமும் – போஷாக்கான தேசமும்” என்ற அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சும், “பிரஜா சக்தி” தேசிய செயலகமும் இணைந்து “பிரஜா சக்தி” தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

2026ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக, நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் குறைந்தபட்சம் ஒரு அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.25,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்தி சபைகளால் முன்னுரிமைப்படுத்தி அடையாளம் காணப்பட்ட கட்டுமான மற்றும் கட்டுமானம் அல்லாத அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

2026 ஜூலை 31ஆம் திகதி வரையில், ரூ.22,425 மில்லியன் பெறுமதியான 15,646 அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 53.2 சதவீதமான 8,323 திட்டங்கள் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களாகவும், 46.8 சதவீதமான 7,323 திட்டங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களாகவும் உள்ளன.

இதன் முன்னேற்றத்தை நிர்வாக மாவட்ட மட்டத்தில் மீளாய்வு செய்யும் கூட்டங்கள், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் நடைபெற்று வருகின்றன.

இதற்கமைய, காலி மாவட்டத்திற்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (16) காலி மாவட்ட செயலக வளாகத்தில் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, ரூ.1,134.76 மில்லியன் ஒதுக்கீட்டின் கீழ் காலி மாவட்டத்தில் 938 அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அவற்றில் 480 கட்டுமானத் திட்டங்களும், 458 கட்டுமானம் அல்லாத திட்டங்களும் அடங்குகின்றன.

இந்த அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் 49,201 பேர் நேரடிப் பயனாளிகளாகவும், 122,812 பேர் மறைமுகப் பயனாளிகளாகவும் பயன்பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

காலி மாவட்டத்திற்கான ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் ஆறு பிரதான பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1. உற்பத்திப் பொருளாதாரம்: ஒதுக்கப்பட்ட நிதியில் 49.40 சதவீதம் – திட்டங்களில் 56.1 சதவீதம்.

2. உணவுப் பாதுகாப்பு: ஒதுக்கப்பட்ட நிதியில் 25.80 சதவீதம் – திட்டங்களில் 25.5 சதவீதம்.

3. விநியோக வலையமைப்பு அணுகல்: ஒதுக்கப்பட்ட நிதியில் 15.10 சதவீதம் – திட்டங்களில் 11.2 சதவீதம்.

4. சமூகச் சூழல்: ஒதுக்கப்பட்ட நிதியில் 7.80 சதவீதம் – திட்டங்களில் 5.4 சதவீதம்.

5. மனித வள அபிவிருத்தி: ஒதுக்கப்பட்ட நிதியில் 1.90 சதவீதம் – திட்டங்களில் 1.7 சதவீதம்.

6. பாதுகாப்பு: ஒதுக்கப்பட்ட நிதியில் 0.01 சதவீதம் – திட்டங்களில் 0.1 சதவீதம்.

கூட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அனைத்து திட்டங்களையும் துரிதப்படுத்தி, இந்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் அவற்றை மக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் உபாலி பன்னில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

குறிப்பாக, அரச நிதி ஒழுக்கத்தைப் பாதுகாத்து, ஒதுக்கப்படும் நிதியின் மூலம் மக்களுக்கு அதிகபட்ச பயன் கிடைக்கும் வகையில் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க யூ. கமகே, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் மேலதிக செயலாளர் மேனக ஹேரத், கிராமிய அபிவிருத்திப் பணியக அதிகாரிகள், காலி மாவட்ட செயலாளர் கே.யூ. சந்திரலால், மேலதிக செயலாளர் ஆயேஷா காரியவசம், திட்டமிடல் பணிப்பாளர் ரசாங்க சூரியஆரச்சி, காலி மாவட்ட பிரதேச செயலாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

முல்லைத்தீவு மருத்துவமனை புதிய மருத்துவ விடுதி

இழந்துபோன அரசியல் மறுமலர்ச்சியை மீட்டெடுப்போம்