இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் (BASL) அவுஸ்திரேலிய சட்டத்துறைப் பேரவையும், 39ஆவது LAWASIA மாநாட்டை முன்னிட்டு, கொரியக் குடியரசின் சியோல் நகரில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவுஸ்திரேலிய சட்டத்துறைப் பேரவையின் தலைவர் திருமதி டானியா வுல்ஃப் அவர்களும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜிவ அமரசூரிய , அமைப்புகளின் சார்பில் கையெழுத்திட்டார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளின் சட்டத்துறையினருக்கு இடையிலான ஒத்துழைப்பையும் தொழில்சார் பரிமாற்றங்களையும் வலுப்படுத்துதல், சட்ட அறிவு மற்றும் வளங்களின் பரிமாற்றத்தை எளிதாக்குதல், அத்துடன் சட்டத்தின் ஆட்சியையும் சட்டத் தொழில் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் பாதுகாப்பதற்கான எமது பொதுவான அர்ப்பணிப்பை முன்னெடுத்துச் செல்லுதல் ஆகியவற்றை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அவுஸ்திரேலிய சட்டத்துறைப் பேரவையின் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் திருமதி எலிசபெத் ஷியரர்; இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் திரு. நலின் டி சில்வா; அவுஸ்திரேலிய சட்டத்துறைப் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி ஜேம்ஸ் பொப்பிள்; மற்றும் இரு அமைப்புகளினதும் பிரதிநிதிகள் இந்த முக்கியமான நிகழ்வில் இணைந்துகொண்டனர்.
எமது இரு நாடுகளின் சட்டத்துறையினருக்கு இடையில் மேலும் வலுவானதும் நீடித்ததுமான கூட்டாண்மையை எதிர்பார்க்கின்றோம் என்றும் கருத்துக்கள் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings