in

அனுராதபுரத்தில் செப்.25 ஆசிரியர் சங்க பேராளர் மாநாடு

அதிபர், ஆசிரியர்களின் உரிமைகள் மற்றும் கல்வித்துறை பிரச்சினைகள் குறித்து வலியுறுத்த அனுராதபுரத்தில் ஆசிரியர் சங்க மாநாடு

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த பேராளர் மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனுராதபுரம் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.

காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள இம்மாநாட்டில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் உரிமைகள், கௌரவம் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதுடன், கல்வித்துறையில் நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான முன்மொழிவுகள் முன்வைக்கப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்போது ஆசிரியர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், எஞ்சியுள்ள மூன்றில் இரண்டு பங்கு நிலுவைச் சம்பளத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்தல் மற்றும் அதிபர்களின் பணிச்சுமையைக் குறைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளன.

மேலும், கல்வி மறுசீரமைப்பை முறையாகவும் நெறிமுறையாகவும் முன்னெடுத்தல் மற்றும் மாணவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் தொடர்பிலும் மாநாட்டில் முக்கியமாக வலியுறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் குரலை ஒன்றிணைத்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் கல்வித்துறையின் எதிர்காலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்குமான முக்கிய தளமாக இந்த வருடாந்த பேராளர் மாநாடு அமையவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் அனைத்து ஆசிரியர்களையும் இம்முக்கிய பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டு அணிதிரளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் புத்தளம் மாவட்ட செயலாளர் டொக்டர் எஸ்.ஆர்.எம்.எம். அஸார்ட் அழைப்பு விடுத்துள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அனோஜன் விடுதலைக்காக நற்பிட்டிமுனையில் கையெழுத்து சேகரிப்பு

2026 அரச சேவை வலைப்பந்துப் போட்டியில் விமானப்படை ஆதிக்கம்