சென்னை:
இந்திய கடலோர மாநிலங்களில் அதி பயங்கர தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்திய கூறு உள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மற்றும் நுண்ணறிவு பிரிவினரின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக sagar kavach (tn&py) என்று அழைக்கப்படும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பயிற்சியில் இந்திய கடலோர பாதுகாப்பு படை, இந்திய கப்பற்படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, நுண்ணறிவு பிரிவினர், சுங்கத்துறை, வனத்துறை, மீன்வளத்துறை, குடியுரிமைத் துறை, இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு ஆணையம், துறைமுகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில அரசு சார் நிறுவனங்களோடு தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மாநில காவல் துறையினர் என சுமார் 8,700 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்கள் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த பாதுகாவலர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில் ஒரு பிரிவினர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைப் போல கடல் வழியாக தமிழக நிலப் பகுதியில் ஊடுருவி பாதுகாக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகமாக புழங்கும் சந்தைப் பகுதி, வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு வைத்தல், பொதுமக்களை அச்சுறுத்துகிற நடவடிக்கைகளில் இறங்குதல், முக்கிய தலைவர்கள் பொதுமக்கள் மற்றும் கப்பல்களை கடத்துதல், பிணைய கைதிகளை பிடித்து வைத்தல் போன்ற தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது போல் ஒத்திகைக்கு திட்டமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் அவர்களை ஊடுருவ விடாமல் தடுக்கும் துரித நடவடிக்கை ஒத்திகையில் ஈடுபட்டனர். அதற்கு தேவையான கப்பல்கள், படகுகள், ஹெலிகாப்டர்கள், கரையோரம் ஓடும் வாகனங்கள் என ஆயிரத்திற்கும் அதிகமான ஊர்திகளில் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டனர். கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் 28 படகுகள் திருவள்ளூரில் இருந்து கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டன. மேலும் கண்காணிப்பு ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன. தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது போல செயல்பட நியமிக்கப்பட்ட காவலர்கள் 21 பகுதிகளில் இடைமறிக்கப்பட்டு 91 நபர்கள் பிடிக்கப்பட்டனர். பாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர்.
பயிற்சியின் பகுதியாக தீவிரவாத ஒத்திகை பயிற்சி சென்னை துறைமுகத்தில் காலை 11.30 முதல் 12.50 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தீவிரவாதிகள் சாகர் டாரா என்ற கப்பலை கைப்பற்றி அதில் உள்ள ஊழியர்கள் மற்றும் 14 மாலுமிகள் பினைய கைதிகளாக பிடித்து வைத்து அவர்களை விடுவிக்க 200 அமெரிக்கன் டாலர் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் கேட்டு நிபந்தனை வைப்பது போலவும், அரசு இதை மறுத்து அதிரடி நடவடிக்கை எடுப்பது போலவும் அந்த உத்தரவின் பேரில் காவல்துறை கூடுதல் இயக்குனர் கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மாநில கடல் சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அவர்களது மேற்பார்வையில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் தமிழ்நாடு கமாண்டோ படை வீரர்கள் இந்திய கடற்படை இந்திய கடலோர பாதுகாப்பு படை சென்னை பெருநகர காவலர்கள் ஆகியோர்கள் மூலம் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு பிணைய கைதிகளையும் கப்பல்களை மீட்பது போலவும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இப்பயிற்சியில் முதன்முறையாக தேசிய பாதுகாப்பு படை வீரர்களை கப்பலில் இறக்கிவிட இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் சங்கர் ஜீவாவின் வழிகாட்டுதலின்படி கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் மற்றும் கடலோர பாதுகாப்பு இயக்குனர் வழிகாட்டுதலின்படி இந்த பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings